தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட அமைப்பாளராகக் கடமையாற்றிய மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் என்பவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை அறிக்கை வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக்கொள்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் பொலிஸார் வழங்கிய பொருட்கள் தொடர்பில் அவசரமாக பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குரிசிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment