ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஹோட்டல் ஒன்றிலிருந்து அழைத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சிகள் தன்னிடம் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், பாசிகுடா பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி நாட்டு பிரஜைகள் சிலரை சந்தித்த சம்பவம் தொடர்பாக சி.சி.ரி.வி. காணொளியொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், இதில் உள்ளவர்கள் அரபுநாட்டு முதலீட்டார்கள் என்றும் தான் எந்தவித சட்டவிரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார்.
மேலும் தனக்கு எதிராக விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு தான் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே அவர் தொடர்பாக வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment