வடமாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்தியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் ஜந்து மாவட்ட செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் வவுனியா இந்து இளைஞர் சங்கக் கட்டடத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது,
சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் இம் முறையும் எமது நியமனம் தட்டிக்கழிக்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
கடந்த 2014ஆம் ஆண்டு வடக்கில் 900 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல போராட்டங்களுக்கு மத்தியில் கவனவீர்ப்புப் போராட்டம் எழுத்து மூலமான ஆவணங்கள் சுகாதாரம் தொடர்புபட்ட அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம்.
இறுதியாக வடமாகாண சபையின் இறுதி அமர்வின் போதும் நியமனம் தொடர்பாக விஷேட தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாகவும் வடமாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு அமையவும் இறுதி முடிவு கிடைக்கப்பெற்றிருந்தது.
வடக்கில் சுகாதாரத் தொண்டர்களாக 2014 தொடக்கம் பெயர்ப்பட்டியலிலுள்ளவர்களுக்கு கல்வித்தகமை பாராமல் சுகாதாரத் நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு விஷேடமாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அத்தீர்மானத்திற்கு அமைய கடந்த மாதம் மே மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரையும் வடமாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் மாவட்ட ரீதியாக நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
அதற்கு அமைவாகவும் எங்களுடைய 850 ற்கும் மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் பதிவியிலிருந்தவற்றைவிடவும் நேற்றும் வடமாகாணத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் 2014ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் எங்களுக்கு விஷேட தீர்மானம் எடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. வடமாகாண சுகாதாத் தொண்டர்களின் செயற்பாட்டுக்குழு ஒரு அச்ச நிலையில் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கை எவ்வாறு நியமனம் வழங்குவதில் செலுத்தப்பட்டிருந்தது. இம்முறையும் எங்களுக்கு அந்த அநீதி நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம். 900 பேருக்கிடையே எங்களுடைய சுகாதாரத் தொண்டர்கள் இருக்கின்றனர்.
தற்போது 3 ஆயிரத்திற்கு அதிகமானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆனால் எடுக்கப்பட்ட விஷேட தீர்மானத்திற்கு அமைவாக கல்வித் தகமை பாராமல் யுத்த காலத்தில் பணிபுரிந்த தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நியமனம் வழங்கவேண்டும் இந்த சுகாதாரத் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பிற்பாடு மேலதிகமாக உள்வாங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கு 70 வீதமும் ஆண்களுக்கு 30 வீதமும் எடுக்கப்படும் என்று இறுதியாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் பெண்கள் 70 வீதம் உள்வாங்கப்பட்டு 30 வீதம் ஆண்கள் இல்லா விட்டால் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆண்களையும் உள்வாங்கலாம் என்று வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் செயற்பாட்டுக்குழு எதிர்பார்கின்றது.
கடந்த காலத்தில் பல போராட்டம் மேற்கொண்டது எமது வாழ்க்கைப்பிரச்சினைக்கு எமக்கு வேலை என்றது கட்டாயமானது எமது பல போராட்டத்திற்கு மத்தியிலேயே எமக்கு இந்த நேர்முகத் தேர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விடயத்தில் எமக்கு சாதகமான பதில் கிடைக்காவில்லை என்றால் இங்கு கூடியுள்ள அனைவரும் ஏதோ ஒரு அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும்- என்றனர்.
0 comments:
Post a Comment