வவுனியா ஓமந்தை மாணிக்க இழுப்பைக்குளம் விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலய மாணவரான 19 வயதுடைய சாருஜன் என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த பகுதியில், கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் வவுனியா நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்
ஓய்வு பெற்ற அதிபர் சி. வையாபுரிநாதன் மற்றும் அவரது துணைவியாரான ஓய்வு பெற்ற ஆசிரியை வையாபுரிநாதன் திலகவதி, மற்றும் அவர்களது பேரப்பிள்ளை ஆகியோரே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்திருந்தனர்
இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியையான 82 வயதுடைய வையாபுரிநாதன் திலகவதி அன்றைய தினமே உயிரிழந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிபர் வையாபுரிநாதன் மற்றும் அவரது பேரனாரான குறித்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment