வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி முல்லைத்தீவில் இன்று 846 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இன்று வரை தமக்கான தீர்வும் கிடைக்காத நிலையில் இன்றும் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் தொடர்ச்சியாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கொட்டகைக்கு முன்பாக இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
0 comments:
Post a Comment