இங்கிலாந்தின் ஆதிக்கத்தை அடக்குமா இலங்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரத்தில் உள்ள ஹெடிங்லி (Headingley) மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்தத் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரே ஒரு போட்டியில் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.

சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி இந்த தொடரில் 4 முறைக்கு மேல் 300 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது. துடுப்பாட்டம் மட்டுமன்றி பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இங்கிலாந்து அணி பலமாகவேயுள்ளது.

இலங்கை அணி மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றிப்பெற்று, புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. மழை காரணமாக இரு போட்டிகள் ரத்தான நிலையில், 2 போட்டிகளில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இதுவரை உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 6 இல் இங்கிலாந்தும், 4இல் இலங்கையும் வெற்றிப்பெற்றுள்ளன. 

இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்ப்புள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment