சமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், ஈரானுடன் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமாதான கதவுகளை திறந்தே வைத்திருக்கிறோம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கும் அமெரிக்கா மறுபுறம் சமாதானப் பேச்சுக்கு கதவுகள் திறந்திருப்பதாக பொய் சொல்கிறது என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றம்சாட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில் எங்கள் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மீது தடை விதிப்பீர்களா? இதன் மூலம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பது தெளிவாகி விட்டது எனவும் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment