அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் சம்பள அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த வருட இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் திருத்தியமைப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜுலை 1ம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
134 புதிய உதவி சுங்க அத்தியட்சகர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்துக்கொண்ட போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். சுங்கத் திணைக்களத்தில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment