உளவு பார்க்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அரசுடன் கையெழுத்திடத் தயாராகவிருப்பதாக ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனமான ஹூவாய்யின் தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாக அமெரிக்காவை சீனா உளவு பார்ப்பதாகக் கூறி அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.
இதனை எதிர்த்து ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையிலேயே, உளவு பார்க்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க அரசு எதிர்காலத்திலும் தங்களுடனான வர்த்தகத்தை ஆரம்பிக்கத் தயாராக இல்லாத நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு வாய்புள்ளதா என்பது தெரியவில்லை என்றும் ஹுவாய் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment