இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின்16 ஆவது தேசிய மாநாடு சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
செல்வா நினைவுச் சதுக்கத்தில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மாநாடுஇடம்பெற்ற வீரசிங்கம் மண்டபம் வரை ஊர்வலமும் இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment