உத்தரப்பிரதேச அரசு குற்றவாளிகளிடம் சரணடைந்து விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றமை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“குற்றவாளிகள், உத்தரப்பிரதேசத்தில் சுதந்திரமாக நடமாடி திரிவதுடன் அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்கின்றார்கள்.
ஆனால் பா.ஜ.க.அரசு அவைகளை கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதின் ஊடாக குற்றவாளிகளுக்கு துணை போவது உறுதியாகின்றது” என பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment