யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
0 comments:
Post a Comment