ஒடிசா மாநிலம் ஹவுராவில் இருந்து ஜகதல்பூர் நோக்கி சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் இன்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் சிங்காபூர் மற்றும் கெவுட்குடா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது திடீரென தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரெயிலின் எஞ்சின், லக்கேஜ் பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டி ஆகியவை தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. மேலும், எஞ்சினில் திடீரென தீப்பற்றியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment