ஸ்மித்தை கிண்டலடித்த ரசிகர்கள் ; கண்டித்த கோலிக்கு குவியும் பாராட்டு

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை மைதானத்தில் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை, விராட் கோலி கண்டித்த விதம், அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. 

அதில், கேப்டன் விராட் கோலி மைதானத்திற்குள் நுழைந்தபோது, பவுண்டரி கோட்டில் நின்ற ஸ்மித்தை, இந்திய இரசிகர்கள் ஏமாற்றுக்காரர் என விமர்சித்து முழக்கமிட்டனர்.

கடந்த ஆண்டு தென் ஆபிரிக்க அணிக்கு எதிராகப் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ரசிகர்கள் இவ்வாறு முழக்கங்களை எழுப்பினர். இதைக் கண்ட விராட் கோலி, ரசிகர்களைப் பார்த்து, இந்திய அணியை உற்சாகப்படுத்துமாறும்,  ஸ்மித்தை விட்டு விடுமாறும் கேட்டுக் கொள்ளும் வண்ணம் சைகை காட்டினார்.

இந்த செயலால் நெகிழ்ந்த ஸ்டீவ் ஸ்மித், கோலிக்கு கை கொடுத்து, முதுகில் தட்டி சிரித்தபடி சென்றார். 

போட்டி முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, ரசிகர்கள் சார்பில் ஸ்டீவ் ஸ்மித்திடம் தாம் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment