ரிசாட் பதவி துறப்பு ; பெங்கல் பொங்கி வழிபட்ட இளைஞர்கள்

அமைச்சர் ரிசாட் பதியூதீன் அமைச்சர் பதவி  துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர்  அமைச்சர் ரிசாட் பதியூதீன் உட்பட மேல் மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, நேற்று அமைச்சர் ரிசாட் பதியூதீன் உட்பட முஸ்லீம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகினர்.


இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பதவி விலகியதை அவரால் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான சாளம்பைக் குளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான  செக்கடிப்புலவு கிராமத்து இளைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.



பம்பைமடு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்றவர்களுக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்தனர்.



இதன்போது கருத்து தெரிவித்த இளைஞர்கள், கடந்த காலங்களில் அமைச்சரினால் நாம் ஓரங்கட்டப்பட்டிருந்தோம். எமது கிராமங்கள் பூர்வீக கிராமங்களாக இருந்தபோதிலும் எமது கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் புதிதாக அமைக்கப்பட்ட சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.


எமது கிராமத்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இதன் காரணமாக அவரது அமைச்சு பதவி துறந்ததையும் இனிவரும் காலங்களில் எமது தமிழ் கிராமங்களுக்கு விமோசனம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment