முல்லைத்தீவில் சிரமதானப் பணி

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாகவும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வாவி கரையோரத்தில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன.

ஜனாதிபதி செயலகத்தின்  மேலதிக செயலர் ரோகண அபேரத்ன  மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக மாவட்டச் செயலர் கோ.தனபாலசுந்தரம்  இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இராணுவ படை வீரர்கள் பொதுமக்கள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலக  உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  இப்  பணிகளை மேற்கொண்டிருந்தனர் 

இதேவேளை, கடற்படை மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஜனாதிபதி செயலக மேலதிக செயலர் ரோகண அபேரத்ன,  முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் உள்ள நந்திக் கடல் ஓரமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.






























Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment