வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய எழுவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இந்தியாவின் ராமநகரா மாவட்டம் கொடிகெஹள்ளி பகுதியில் நடந்துள்ளது.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மா என்பர் வாங்கிய கடனைதிருப்பி செலுத்தாததால் அவரை ஊர்மக்கள் மின் கம்பத்தில் கட்டிவைத்தனர். அவரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ராஜம்மா உணவகம் நடத்துவதற்காக பலரிடம் 12 இலட்சம் ரூபாவரை கடன் பெற்றதாகவும் நஷ்டம் காரணமாக கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் தர்மசாலாவில் இருந்த ராஜம்மாவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த ஊர்மக்களில் சிலர் அவரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர்.
இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment