நாம் பெற்ற உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமான கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்தவேண்டிய தருணம் இதுவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் பொசன் பௌர்ணமி தின உறுதிமொழியாக அமைய வேண்டியதும் அதுவேயாகும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆத்மீக மலர்ச்சியையும் வளமான கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அதற்கான ஆற்றலும் அறிவும் கிட்டும் பொசன் பௌர்ணமி தினமாக இன்றைய தினம் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment