மகளின் திருமணத்துக்காய் மரம் வெட்டிய தந்தை

மகளின் திருமண செலவுக்காக 860 மரங்களை வெட்டிய நபருக்கு இரு மடங்கு மரங்கள் நட வேண்டும் என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், நடந்துள்ளது.

தானே மாவட்டத்தில் உள்ள பத்லாப்பூரை சேர்ந்த தஷரத் குர்ஹடே(Dasharath Kurhade) என்பவர், தனது மகளின் திருமண செலவுக்காக தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டியுள்ளார்.

அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தஷரத்திடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மரங்களை வெட்டிய இடத்தில் 4 மாதங்களுக்குள் வெட்டிய மரங்களை போல் இருமடங்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மரங்களை நடவில்லை என்றால் புதிய மரங்களுக்கான தொகையை அவர் செலுத்த வேண்டும் என்று  வனத்துறையினர் குறிப்பிட்டனர். 

இதுகுறித்து தஷரத்தின் சகோதரர் ஹர்சந்த் கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெறுவதாகவும், ஏழ்மை காரணமாக மரத்தை வெட்டியதாகவும் தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment