அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்தலோசித்த போதிலும் இறுதியான ஒரு முடிவு எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பதவிகளை இராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment