மரக்கன்று நட்டு அதனோடு செல்பி எடுத்து பகிரும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
இதில் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு அதனோடு செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பகிர அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி மரக்கன்று ஒன்றை நட்டு அதனோடு செல்பி எடுத்து பகிர்ந்திருந்த அவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரஃப் ஆகியோருடன் டெல்லி பர்யவரன் (Paryavaran) பவனில் இன்று மரக்கன்றுகளை நட்டார்.
பலரும் மரக்கன்று நட்டு செல்பி எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment