நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் கவலையில் இருக்கிறார்.
அத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற தாமதமும் அவரைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பா
ராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது அவர் இவ்வாறு கவலை வெளியிட்டதாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. கூறினார்.
0 comments:
Post a Comment