கம்பஹாவிலுள்ள கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – கண்டி வீதியிலுள்ள பஸ்யால சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள மூடிய கடையொன்றுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டு, அந்தப் பகுதியிலுள்ள வீதிகளில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
புத்தர் சிலை உடைக்கப்பட்ட கடைக்கு முன்னால் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன வன்முறையை ஏற்படுத்துவதற்காக சிலை உடைக்கப்பட்டதா அல்லது மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் இன்னும் உறுதி செய்யவில்லை.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment