வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் SMD கபில சமரவீர வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
கடற்படையினர் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் புதிய கடற்படை கட்டளை தளபதியுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் கடற்படையினருக்குமிடையில் சுமூகமான நிலைமைகளை கட்டியெழுப்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
0 comments:
Post a Comment