ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானிற்கிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் எதிர்வரும் புதன்கிழமை அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானியை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இந்த விஜயம் உதவும் என ஈரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment