நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று காலை கவர்னரை சந்தித்தனர். கவர்னரை சந்தித்த பின் அந்த அணியின் அமைப்பாளர் ஐசரி கணேஷ் அளித்த பேட்டி விபரம்:-
‘விஷால் அணியினர் கவர்னரின் நேரத்தை வீண் செய்துவிட்டனர். அவர்கள் கவர்னரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம். எங்கள் அணி எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறியுள்ளோம். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
விஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம். இந்த தேர்தலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. இது தமிழக அரசு சம்மந்தப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டு பேச ஒன்றுமில்லை என்று ஆளுநர் கூறினார்’. இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment