ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியம் வழங்கும் ஒருவரால், உண்மைக்குப் புறம்பான வாக்குமூலம் வழங்கப்பட்டால் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவதானம் செலுத்த முடியும் என அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராஸிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிராகரிப்பதாக தெரிவித்திருந்தார்.
எனினும், சமூகவலைதளங்களில் பதிவாகியுள்ள அவரின் போதனைகள் அடங்கிய காணொளியில், ஐ.எஸ். இன் செயற்பாடுகளுடன் அவர் இணங்குவதாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழு இதுவரையில் 7 தடவைகள் கூடியுள்ளதுடன். பலர் முன்னிலையாகி சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
மேலும் பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்கு தெரிவுக்குழு எதிர்பார்த்துள்ள நிலையில், சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment