8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். திரைத்துறையில் நுழைவதற்கு முன்பாகவே பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆப் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.
தற்போது நடிப்புடன் சேர்த்து அழகிப் போட்டிகளை ஒருங்கிணைத்து வருகிறார் மீரா மிதுன். ‘மிஸ் தமிழ்நாடு டிவா 2019’ என்ற அழகிப் போட்டியை ஜூன் 3 -ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அழகிப் போட்டியை நடத்தக்கூடாது என்று அவரை சிலர் மிரட்டுவதாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
0 comments:
Post a Comment