ட்ரோன்கள் மூலம் வீடுகளுக்கு பொருட்களை அனுப்பி வைக்கும் சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் தற்போது ஊழியர்கள் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ட்ரோன்கள் எனப்படும் சிறிய ரக விமானங்கள் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான சோதனை முயற்சிகள் வெற்றி பெற்ற நிலையில் முதற்கட்டமாக துணிகள் உள்ளிட்ட எடை குறைவான பொருட்களை அனுப்ப அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இரண்டு கிலோ எடையில் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்களுக்கு ட்ரோன் மூலம் பொருட்களை விநியோகம் செய்யவும், இந்தத் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment