ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இன்றையதினம் அழைத்து வரப்பட்டனர்.
உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் வரையிலானோர் சிக்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இரண்டு மணிநேரம் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் அகதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment