மேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன.
மேன்மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில், அசாத் சாலிக்குப் பதிலாக, மேல் மாகாண ஆளுநராக பீலிக்ஸ் பெரேராவை, நியமிக்கும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான மூத்த அரசியல்வாதிகள் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண ஆளுநராக தமிழ் அல்லது முஸ்லிம்களே நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது என்றும், எனவே, அசாத் சாலியை நீக்கி விட்டு சிங்களவரான பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1988ஆம் ஆண்டில் இருந்து மேல் மாகாண ஆளுநர்களாக, சுவாமிநாதன், விக்னராஜா, பத்மநாதன் இராமநாதன், அலவி மௌலானா, கே.சி.லோகேஸ்வரன், ஆகியோர் பதவி வகித்து வந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் ஹேமகுமார நாணக்காரவும் ஆளுநராக இருந்தார்.
அவரையடுத்தே, அசாத் சாலி மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment