கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு தன் வரைதலுக்கு விடைகொடுத்து கண்ணீரால் உறையவைத்த சிறுவன்.
கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு விடைகொடுத்து அனைவரையும் கண்ணீரால் உறையவைத்துள்ளான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் சி. விதுசன்
குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
பல திறமைகளை தன்னகத்தே கொண்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் தரம் 6 இல் கல்வி கற்றுவந்த சிவனேசன் விதுசன் குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக குறித்த மாணவன் இந்திவிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பலரும் முன்வந்து நிதியுதவி அளித்து சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அனுப்பியிருந்தனர்.
சில நாள்கள் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த விதுசன் நேற்றையதினம் சிகிச்சைகள் பயனின்றி இந்தியாவில் காலமானார்.
சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக முகநூல்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் பெற்றோரால் விடப்பட்ட கோரிக்கைக்கமைய வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் லண்டன் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபா உட்பட பல உபகாரிகள் பணம் வழங்கி சிறுவனின் உயிரைக் காக்க உதவியிருந்தனர்.
இவ்வாறு விதுசனின் உயிரைக்காக்க வேண்டுமென தம்மாலான உதவிகளை வழங்கியிருந்தவர்களுக்கு பெற்றோர் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment