அரசியல் உறுதியற்ற நிலை மற்றும் அரசியல் மாற்றங்களினால் இலங்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் உலக வங்கி எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அத்தோடு நாட்டில் இடம்பெற்ற சமீபத்திய பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை குறைத்துள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பு, நாட்டின் அரசியல் தன்மை நம்பிக்கையற்ற விதமாக காணப்படுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அதிகரித்துள்ள பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் அறிக்கையின் பிரகாரம் கடந்த 3 ஆண்டுகளில் உலக பொருளாதத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் சர்வதேச பொருளாதார விவரங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment