அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல தகவல்கள் இரகசியமாகப் பேணி வருகின்றது.
இவ்வாறு பேணப்பட்ட சில தகவல்கள் கடந்த வருடம் தனி நபர் ஒருவரால் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய Raspberry Pi கணினியை பயன்படுத்தியே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாசாவின் Jet Propulsion Laboratory வலையமைப்பில் புகுந்தே தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
Raspberry Pi என்பது 35 டொலர்களே உடைய கிரடிட் கார்ட் அளவுடைய சிறிய கணினி ஆகும்.
இதனை பொதுவாக ரோபோ தொழில்நுட்பம் மற்றும் சிறுவர்களுக்கு புரோகிராம்களை சொல்லிக்கொடுப்பதற்கு பயன்படுத்துவார்கள்.
இச் சிறிய சாதனைத்தைப் பயன்படுத்தியே 500MB கோப்பு அளவுடைய 23 கோப்புக்கள் திருடப்பட்டுள்ளன.
தற்போது குறித்த ஹேக்கரை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது.
0 comments:
Post a Comment