வாழ்த்துச் செய்தியை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்ததன் காரணமாக கூகுள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கான வாழ்த்துச் செய்தியே தவறுதலாக பகிரப்பட்டது. இது தொடர்பிலேயே அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
வீடியோ அழைப்புக்கான டுவோ செயலியை இந்தியாவில் விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது.
இதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை விராட் கோலி ஊக்கப்படுத்துவது போன்ற வீடியோ, இந்திய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பகிரப்பட்டது.
ஆனால் மென்பொருள் கோளாறு காரணமாக இந்தச் செய்தி, பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதுதொடர்பில் அந்த வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்தே கூகுள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment