இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று(08) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் இந்த இழப்பீட்டை வழங்குவதற்காக பிரதமர், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இந்த விசேட பொருளாதார பொதி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்;.
இதற்கமைய காயமடைந்தவர்கள், நீண்டகால அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நஷ்டஈடு தொடர்பில் தீர்மானிப்பதற்கு விசேட அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment