மாங்குளம் மகா வித்தியாலயத்தில் குடிதண்ணீர்த் தொகுதி திறந்து வைப்பு

முல்லைத்தீவு, மாங்குளம் மகா வித்தியாலய  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  குடிதண்ணீர்த்  தொகுதி இன்றையதினம் திறந்து  வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நாட்டுக்காக ஒன்றிணைவோம்  வேலைத்திட்டத்தின் கீழ் குடிதண்ணீர்த் தொகுதி அமைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் த ஜோகானந்தராஜா  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின்   உதவிச் செயலர் லலித் பண்டார, முல்லைத்தீவு மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கடசி  அமைப்பாளரும்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ச சத்தியசுதர்சன்,  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment