வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீன் இற்கு எதிராக சட்டத்தை கடினமாகும் படி கோரி, அக்மீமன பிரதேச சபையின் உப தலைவர் ஏ.கே சுகத் உள்ளிட்ட பிரதேசபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வைத்தியர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நட்டஈடு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் வைத்தியர் ஷாபிக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இந்திக நவரத்னவால் பிரதேச சபையில் முன்வைத்த யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனில் பிரியதர்சன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீனுக்கு எதிராக கடந்த 23 நாட்களில் ஆயிரத்திட்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment