விகாரை நிகழ்வுகளில் பங்கேற்க மங்களவுக்குத் தடை

சர்ச்சைக்குரிய அறிவிப்புக்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி,  நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக மாத்தறை விகாராதிபதிகள் சங்கம் நேற்று முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுத்துள்ளது.

மாத்தறை மாவட்டத்திலுள்ள விகாரைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் அமைச்சர் மங்கள சமரவீரவை அழைக்காதிருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சர் மாத்தறை மாவட்டத்தில் பங்குகொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாது அவற்றைப் புறக்கணிக்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அச்சபை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

நிதி  அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நேற்று  மாத்தறை மகாசங்கத்தினர் மாத்தறை சுதர்சனி பிரிவெனாவிலிருந்து எதிர்ப்பு ஊர்வலமொன்றையும் நடாத்தியுள்ளது.

அமைச்சருக்கு எதிராக கம்பஹா மாவட்டத்திலுள்ள விகாராதிபதிகள் சங்கமும் இதேபோன்றதொரு தீர்மானத்தைக் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இது ஒரு பௌத்த நாடு அல்லவெனவும், அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தவறானது எனவும் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காதினல் கலந்துகொண்டமை குறித்தும் கருத்துத் தெரிவித்ததற்காகவே அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment