வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சியின் மாநாடு நடைபெற்ற யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சோ. சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதன் போது காணாமல் போன உறவுகளைத் தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகள் மண்டபத்தின் முன்பாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியாவில் காணாமல் போன உறவுகளைத் தேடி போராட்டம் நடத்தி வருபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment