புதுச்சேரி சட்டப்பேரவை புதிய சபாநாயகராக காங்கிரஸைச் சேர்ந்த சிவக்கொழுந்து பதவியேற்றுக்கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.
சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி புதிய சபாநாயகராகத் தேர்வான சிவக்கொழுந்து இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
ஜனநாயக முறைப்படி சபாநாயகர் தேர்வு நடக்கவில்லை எனக் கூறி ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் பதவி ஏற்பைப் புறக்கணித்துள்ளன.
0 comments:
Post a Comment