யாழில் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் மஸ்ஜித் மர்யம் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை இன்றைய தினம் இடம்பெற்றது.
மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) தலைமையில் தொழுகை இடம்பெற்றதுடன், தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசலின் (மதனி) நோன்புப் பெருநாள் விசேட உரையும் (பிரசங்கம்) இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் நகர்ப்புற முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், முஸ்லிம் வட்டாரம் சின்ன மொஹிதீன் பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அபூபக்கர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றன.
0 comments:
Post a Comment