ரிஷாட்டுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை – பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அறிவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எந்தவிதமான தீவிரவாத செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சபாநாயகர் கரு ஜயசூர்யாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் நேற்று சபாநாயகருக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் குழு நடத்திய விசாரணைகளில், ரிஷாத் பதியுதீன் தொடர்பில் வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அவருக்கும் தீவிரவாதத்திற்குத் தொடர்புகள் இருப்பதாக எவரும் சாட்சியங்களை முன்வைக்கவோ, முறைப்பாடுகளைச் செய்யவோ இல்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment