முல்லைத்தீவு-துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் கல்விக் கோட்டத்தில் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் நேற்றுத் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் திருமதி அ ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி த பங்கயச்செல்வன், ரோட்டரி கழகம் சுன்னாகத்தினுடைய தலைவர் திருவாதவூரன். புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த், சுன்னாகம் ரோட்டரி கழகத்தினுடைய செயலர் த வாமதேவன், உறுப்பினர் ரெஜினோல்ட், பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை அதிபர் த.தயாபரன் உள்ளிட்டவர்கள் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தனர்
சுன்னாகம் ரோட்டரி கழகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பெற்றோர்கள் இணைந்து இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்கான நிதியை வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment