ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது என இலங்கைக்கான இந்திய தூதுவர், தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
அனைத்துலக யோகா நாளை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் யோகா ஒன்றை எமக்குக் கூறினால், ஜிகாதி தீவிரவாதம் அதற்கு எதிர்மாறாக கூறுகிறது. இந்த ஜிகாதி கொள்கை அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக உள்ளதென தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவினைவாத கருத்தியல்களைக் கொண்ட மக்களின் மனங்களை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நம்மை ஒன்றிணைக்கும் சக்திகளை நாம் பலப்படுத்தும் நேரம் இதுவென்றும் நாங்கள் ஒன்றுபட்டால், எழுந்து நிற்க முடியும், பிளவுபட்டால் வீழ்ச்சிக்காண நேரிடும் என்றும் அவர் தெரிவிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment