யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் அமெரிக்கா சென்று வரும் விமான பயணச்சீட்டுக்கான பணத்தை, யாழ் மாநகரசபை நிதியிலிருந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாநகரசபை அமர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதன்போதே, முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அமெரிக்காவில் நடக்கவுள்ள தமிழ் மாநாடொன்றில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், போக்குவரத்து செலவு தவிர்ந்த ஏனைய செலவுகளை ஏற்பாட்டாளர்கள் கவனிப்பதாகவும், போக்குவரத்த செலவை யாழ் மாநகரசபை நிதியிலிருந்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
உள்ளூராட்சி கட்டளை சட்டத்தில் அப்படி நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டது.
இதேவேளை, இந்த அமர்வில் கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்திற்காக பொதுமக்களிடம் நிதி வசூலிப்பது கடும் சர்ச்சையாக உருவெடுத்தது.
சில வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொதுமக்களிடம் நிதி வசூலித்து, அபிவிருத்தி திட்ட திறப்பு விழாக்களை நடத்துகிறார்கள், சில இடங்களில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்து 1,500 ரூபா வரை வசூலிக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சுமத்தினர்.
கம்பெரலிய நிகழ்வுகளிற்காக மட்டுமே சில இடங்களில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், சில இடங்களில் அவற்றை திரும்ப கொடுத்து வருவதாகவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment