இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.
நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment