முல்லைத்தீவு, வள்ளிபுனம் மாற்றுத்திறனாளிகளின் இனிய வாழ்வு இல்லத்தின் கலை விழா நிகழ்வு நேற்றுக் இடம்பெற்றது.
இனிய வாழ்வு இல்ல சிறார்களின் கலை அம்சங்களை வெளிக்கொணரும் முகமாக இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் கலை விழாவில் கலை விழா பரிசளிப்பு விழா இனியவள் என்கின்ற மலர் வெளியீட்டு விழா என்பனவும் இடம்பெற்றன.
இதேவேளை, இனிய வாழ்வு இல்லத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரத்தினத்தால் திறந்து வைக்கப்பட்டது.
மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன
இல்லத்தின் வரலாறுகளை தாங்கி நிற்கும் ஆவணப் புத்தகமாக இனியவள் என்கின்ற நூல் வெளியீடும் இடம் பெற்றிருந்தது
இதில், வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம், முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்டச் செயலர் திருமதி லதுமீரா, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ம.பிரதீபன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆண்டியை புவனேஸ்வரன் உள்ளிடட அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் இனிய வாழ்வு இல்ல நிர்வாக இயக்குநர் சபை உறுப்பினர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment