அரச புலனாய்வுத் துறை பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் இன்று (8) நண்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுக்கு அழைக்கப்பட்ட அரச புலனாய்வுத் துறை பிரதானியான சிசிர மெண்டிஸ், தனது சுகாதார காரணங்களுக்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment