நடிகர் சங்க தேர்தலில், வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் திகதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பித்து, நேற்றுடன் நிறைவடைந்தது.
பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், செயலர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தேர்தலை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் வேட்புமனுக்களை பரிசீலிக்கிறார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
0 comments:
Post a Comment